1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (12:42 IST)

வீடுகளை நோட்டம் போடும் டவுசர் திருடர்கள்! – மதுரையில் பரபரப்பு!

மதுரையில் வீடுகளை கொள்ளையடிக்க நள்ளிரவில் டவுசரோடு அலையும் நூதன திருடர்களின் சிசிடிவி காட்சிகள் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் கடந்த ஆண்டு மாமியார், மருமகளை கட்டி வைத்து 140 சவரன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது அப்பகுதியில் உள்ள காலணி குடியிருப்பு பக்கம் டவுசர் மட்டும் அணிந்த இருவர் இரவு நேரங்களில் சுற்றி வருவது சிசிடிவி காட்சியில் தெரிய வந்துள்ளது.

எந்த ஆடையும் அணியாமல் டவுசரை மட்டும் அணிந்து கொண்டு மாஸ்க், க்ளவுஸ் சகிதம் நடமாடும் அந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.