பாஜக விலகியது பாரம் குறைந்ததுபோல உள்ளது! – அதிமுக சி.வி.சண்முகம்!
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டன. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக வெளியேறிய நிலையில் பாஜக – அதிமுக இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்படாத நிலையில் பாஜக – அதிமுக கூட்டணி பிரிந்தது. பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் பேட்டியின்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் “பாஜக கூட்டணியிலிருந்து விலகியது பாரம் குறைந்ததுபோல உள்ளது. அனைத்து பகுதிகளிலும் அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.