1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madurai Theni Train timing change

மதுரை – தேனி பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றம்! – ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

Madurai Theni Passenger Train
நீண்ட காலம் கழித்து மதுரை – தேனி இடையே பாசஞ்சர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

மதுரை – தேனி இடையே 12 ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டர்லைனாக செயல்பட்டு வந்த ரயில் சேவை பின்னர் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்தன.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த மே 27ம் தேதி முதல் மதுரை – தேனி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தினமும் காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து தேனிக்கு இந்த ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் காலை 08.05 மணிக்கு மதுரையிலிருந்து ரயில் புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனி சென்றடையும். அதுபோல தேனியிலிருந்து மாலை 6.15க்கு ரயில் புறப்பட்டு மாலை 7.50க்கு மதுரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்களுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு!