வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மே 2022 (15:50 IST)

பதவி உயர்வு கிடைக்காததால் ஆத்திரம்! – திட்ட அலுவலரை வெட்டிய உதவியாளர்!

தேனியில் பதவி உயர்வு கிடைக்காமல் செய்த திட்ட அலுவலரை இளநிலை உதவியாளர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்குழு திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இதே துறையில் இளநிலை உதவியாளராக உமா சங்கர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். சில காலம் முன்னதாக உமாசங்கர் மீது ராஜேஸ்வரி சில காரணங்களுக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராஜேஸ்வரி மீது உமாசங்கர் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் உமாசங்கர் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை காரணமாக அவர் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உமாசங்கர், திட்ட அலுவலர் ராஜேஸ்வரியை அலுவலகத்தில் வைத்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

உடனடியாக ராஜேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உமாசங்கரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.