வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (12:18 IST)

பணி நேரத்தில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பு! – மதுரை கிளை நீதிமன்றம் விதித்த உத்தரவு!

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக விதிகளை அமைக்க வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வரும் நிலையில் பணி நேரங்களில் ஊழியர்கள் தங்கள் சொந்த விஷயங்கள் தொடர்பாக செல்போனை அதிகமாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இன்று மதுரை கிளை நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில், அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் சொந்த விசயங்களுக்காக செல்போன் பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது. அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதை தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.