செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (14:15 IST)

குறைந்தது 25 ஆயிரம் பேராவது இருந்தாதான் கட்சி அங்கீகாரம்! – பகீர் கிளப்பும் நீதிமன்றம்

அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரம் பெற கட்சியில் 25 ஆயிரம் பேராவது இருக்க வேண்டும் என நிபந்தனை கொண்டு வர மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கான வழிமுறைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இலகுவாக இருப்பதால் ஆங்காங்கே லெட்டர்பேட் கட்சிகள் பல தொடங்கப்படுவதாகவும், அதன்மூலம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கின்றன என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் ஒரு அரசியல் கட்சி அரசியலமைப்பில் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு குறைந்தது கட்சியில் 25 ஆயிரம் பேராவது இருக்க வேண்டும் என புதிய நடைமுறை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.