போஸ்டர் அடிக்கற செலவை துயர் துடைக்க தந்திருக்கலாம். காங்கிரசுக்கு கஸ்தூரி கண்டனம்

kasturi
போஸ்டர் அடிக்கற செலவை துயர் துடைக்க தந்திருக்கலாம்
Last Modified திங்கள், 29 ஜூன் 2020 (17:22 IST)
சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் மிகப்பெரிய கொடூரம் என்றால் அதை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளின் கொடூரம் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது. இந்த பிரச்சனையை காரணமாக வைத்து எந்த அளவுக்கு அரசியல் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருவதாக கூறப்படுகிறதே
இந்த நிலையில் ’சாத்தான்குளத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் நாடார் மற்றும் பெளிக்ஸ் நாடார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இன்று வருகை தருகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள்’ என்று ஒரு போஸ்டர் சாத்தான்குளம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது

இந்த போஸ்டரில் வசந்தகுமார், விஜயதாரணி உட்பட ஒரு சிலரின் புகைப்படங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்த போஸ்டர் குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறிய நடிகை கஸ்தூரி ’போஸ்டர் அடிக்கிற செலவை துயர் துடைக்க கொடுத்து இருக்கலாம்’ என்றும் ’காமராஜர் படத்தோடு நாடார் என்று போட்டு ஜாதி அரசியல் வேறு’ என்றும் குறிப்பிட்டுள்ளார் மேலும் இந்த போஸ்டரில் காணும் பெரிய மனிதர்கள் பணக்காரர்கள் கொரோனா தடுப்பு பணிக்கு எவ்வளவு கொடுத்தார்கள்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார் கஸ்தூரியின் இந்த டூவிட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :