விநாயகர் சதுர்த்தி விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

Madurai court
விநாயகர் சதுர்த்தி விவகாரம்:
siva| Last Updated: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (16:29 IST)
கொரனோ பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை பொது இடத்தில் கொண்டாட தமிழக அரசு சமீபத்தில் தடை விதித்தது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது பொதுநலன் பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது

ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. இன்றைய விசாரணையின்போது விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக் கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்துசெய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது

மேலும் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்ட தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்பது உறுதியாகியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :