புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (17:10 IST)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம் எல் ஏ நன்மாறன் மறைவு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இருமுறை மதுரையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நன்மாறன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மதுரையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நன்மாறன். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருப்பதால் தனக்கு வசிக்க வீடு வழங்கவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். இது சம்மந்தமாக அப்போது ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் இப்போது நன்மாறன் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் இன்று இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.