வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (20:38 IST)

ஜோசப் விஜய் என்னும் நான்: விஜய் பதவியேற்கும் போஸ்டர் வைரல்

ஜோசப் விஜய் என்னும் நான்: விஜய் பதவியேற்கும் போஸ்டர் வைரல்
மதுரை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது போஸ்டர் கலாச்சாரம் என்பதும், வித்தியாசமான போஸ்டர்களை நகர் முழுவதும் ஒட்டி சினிமா ரசிகர்கள் பரபரப்பு ஏற்படுத்துவார்கள் 
 
குறிப்பாக விஜய் ரசிகர்கள் யாரும் யோசிக்காத அளவிற்கு விஜய் குறித்த செய்திகளை போஸ்டராக வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஜோசப் விஜய் என்னும் நான் என முதல்-அமைச்சராக பதவி ஏற்பது போன்ற போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்
 
031 ஆம் ஆண்டில் விஜய் தான் முதல்வர் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் 115 பேர் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது