1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (16:30 IST)

’ஜெய்ஹிந்த்’ என எழுதியதால் விடைத்தாள் செல்லாதா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஜெய்ஹிந்த் என்ற எழுதியதால் விடைத்தாள் செல்லாது என்று ஒதுக்கப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வில் இயற்கை வளங்களை காப்பதற்கான முக்கியத்துவம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முடிவில் ஜெய்ஹிந்த் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என எழுதியதற்காக திண்டுக்கலை சேர்ந்த கல்பனா என்பவரது விடைத்தாள் செல்லுபடி ஆகாது என கூறப்பட்டது.

இது குறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த நிலையில் கடந்த சில  வருடங்களாக இந்த வழக்கு நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் ஜெய்ஹிந்த் என்று எழுதியதற்காக விடைத்தாள் செல்லுபடி ஆகாது என கூறியது ஏற்புடையது அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாளை மீண்டும் திருத்தி அவரது கட் ஆப், குரூப் 2 பணிக்கு தகுதி உடையதா என பரிசீலிக்கவும் என்றும் டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக கட்டுரையை எழுதும்போது ஒருவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு தேசபக்தியை உணர்வது இயல்புதான் ஜெய்ஹிந்த் என்றால் இந்தியாவிற்கு வெற்றி என்ற பொருள் அவ்வாறு எழுதியதற்காக விடைத்தாள் செல்லாது என்பது ஏற்கத்தக்கது அல்ல என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Edited by Mahendran