நீதிபதிகளை ’மை லார்ட்’ என அழைப்பதை நிறுத்துங்கள் - நீதிபதி நரசிம்மா அறிவுரை
நீதிபதிகளை மை லார்ட் என அழைப்பதை நிறுத்துங்கள் என்று உச்ச நீதிமன்றம் நீதிபதி நரசிம்மா அறிவுறுத்தியுள்ளார்.
நீதிமன்றங்களில் தங்கள் வாதங்களை முன்வைக்கும்போது, மை லார்ட் என வழக்கறிஞர்கள் அழைப்பது வழக்கம். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய பார் கவுன்சில் எந்தவொரு வழக்கறிரும் நீதிபதிகளை மை லார்ட் என அழைக்கத் தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் இது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. இந்த நிலையில், நீதிமன்றங்களில் மை லார்ட் என அழைப்பதை நிறுத்துங்கள். எத்தனை முறை நீங்கள் அவ்வாறு அழைப்பீர்கள் அதற்குப் பதிலாக சார் என அழைக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.