1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 நவம்பர் 2023 (18:19 IST)

அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிபதி கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழ்நாடு அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சில மாதங்களில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் 17 அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்த நிலையில் எந்தவிதமான மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர் ஹென்றி திபன் என்பவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணையில் தான் நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva