வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2023 (14:15 IST)

ஆக்கிரமிப்பில் இருந்த மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1190 ஏக்கர் சொத்து மீட்பு: நீதிமன்றம் உத்தரவு..!

13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து நீதிமன்றத்தின் உத்தரவால் மீட்கப்பட்டுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம் முக்குடி கிராமத்தில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1190 ஏக்கர் தரிசு நிலம் 2009ல் குத்தகைக்கு விடப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் சண்முகத்திற்கு ஆண்டுக்கு 1 லட்சம் என்ற அடிப்படையில் 29 ஆண்டு குத்தகை விடப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் குத்தகைக்கு பெற்றதில் இருந்து நிலத்திற்கான வாடகை, குத்தகை பணம் எதுவுமே தொழிலதிபர் கொடுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran