ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (15:17 IST)

காசு பணம் தேவையில்லை நீ தான் வேணும்... தமன்னா காதலன் விஜய் வர்மாவின் சொத்து இவ்வளவு தானா?

தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் அறிமுகம் ஆனாலும், அயன் படத்தின் வெற்றிதான் அவரை கமர்ஷிய நாயகியாக்கியது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் இப்போது அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. 
 
பாலிவுட்டில் முகாமிட்டுள்ள அவர் தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப் படுத்தும் விதமாக சமீபத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் தமன்னா, அவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ஆனால் அதை இருவருமே மறுத்தனர்.
 
இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 தொடரில் நடித்து வருகிறார் தமன்னா. இதில் நடிகர் விஜய் வர்மா தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் முத்த காட்சி படுக்கையறை காட்சி உள்ளிட்டவற்றில் நடித்து முகம் சுளிக்க வைத்துள்ளார். இருந்தாலும் இருவரும் காதலை வெளிப்படையாக கூறவில்லை. 
 
 இந்நிலையில் தமன்னா முதன் முறையாக தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது, ”ஒருவர் தனக்கு சக நடிகராக இருப்பதால் ஈர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இதுவரை பல சக நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். யாரோ ஒருவருக்கு மிகவும் தனிப்பட்டதாக நீங்கள் நினைக்கும் வரை, அவர்களின் தொழில் முக்கியமல்ல. அவர்களின் தொழிலில் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள் என்று அர்த்தமல்ல.
 
பல பெண்கள் தங்களைப் புரிந்துகொள்ளும் கணவர் இருந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். விஜய்யும் என் உலகத்தை புரிந்து கொண்டார். மேலும், அவர் என்னை எப்போதும் கவனித்துக் கொள்ளும் நபர். என்றாவது ஒருநாள் இரு உலகமும் ஒன்றாகிவிடும். இருவருக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். என்னால் மிக எளிதாக பழக முடிந்த ஒருவர் அவர். தன்னை முழுமையாக என்னிடம் ஒப்படைத்தவன். என்னுடைய எல்லா மகிழ்ச்சிக்கும் ஆதாரம்” என கூறி காதலை உறுதிப்படுத்தினார். 
 
இந்நிலையில் இந்திய சினிமாவின் டாப் நடிகையான தமன்னா ரூ.120 கோடி சொத்து வைத்திருக்கும் நிலையில் அவரது காதலன் விஜய் வர்மா வெறும் ரூ.17 கோடி தான் சொத்து வைத்துள்ளார். இதிலிருந்து தமன்னா பணத்திற்கு ஆசைப்படாதவர் என ரசிகர்கள் அவரை பாராட்டி வாழ்த்து கூறி வருகிறார்கள்.