51 மணி நேரத்திற்கு பின் மீண்டும் தொடங்கிய ரயில் போக்குவரத்து!
ஒரிசா மாநிலத்தில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது 51 மணி நேரம் கழித்து மீண்டும் அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரயில் விபத்து நடந்த பஹானாகா என்ற ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு 11 மணிக்கு மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மீட்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்து 51 மணி நேரத்துக்கு பின்பு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் சரக்கு ரயில் சேவை இயக்கப்பட்டது.
நாளை மறுநாள் அதாவது புதன்கிழமை முதல் பயணிகள் ரயில் சேவை இந்த வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 51 மணி நேரத்தில் துரிதமாக மீட்பு பணிகள் முடிவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva