வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2018 (15:46 IST)

ஜெ.விடம் அடி வாங்கியவர்தான் நடராஜன் - வெளுத்து வாங்கிய மதுசூதனன்

ஜெ.விடம் அடி வாங்கியவர்தான் நடராஜன் - வெளுத்து வாங்கிய மதுசூதனன்
ஜெயலலிதாவிற்கு தான்தான் அனைத்தும் சொல்லிக் கொடுத்ததாக நடராஜன் கூறியிருப்பதில் எந்த உண்மையும் இல்லை என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

 
சசிகலாவின் கணவர் நடராஜன சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டியில், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிற்கு அரசியல் முதல் பல விஷயங்களை தான் சொல்லிக் கொடுத்ததாக கூறியிருந்தார். 
 
இந்நிலையில் இதுபற்றி ஒரு பொதுக்கூட்டத்தி பேசிய மதுசூதனன் “ஜெ.வின் தானே அனைத்தையும் சொல்லிக் கொடுத்ததாக நடராஜன் கூறியிருக்கிறார். அதில் உண்மையில்லை. இதை ஏன் இப்போது சொல்கிறார்? பதில் கூற ஜெ. இல்லை என்பதால் இப்போது கூறுகிறார். அவர் திமுகவினருக்குதான் நிறைய உதவிகள் செய்துள்ளார்.
ஜெ.விடம் அடி வாங்கியவர்தான் நடராஜன் - வெளுத்து வாங்கிய மதுசூதனன்

 
ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது ரூ.41 லட்சம் பணத்தை நடராஜன் மோசடிசெய்தார். அந்தப் பணம் எங்கே என ஜெயலலிதா கேட்ட போது, அதில் நடராஜன் நிலம் வாங்கி விட்டார் என சசிகலா கூறினார். இதுகேட்டு கோபமடைந்த ஜெயலலிதா, நடராஜனை நேரில் சந்தித்து கையில் கிடைத்த ஏதோ ஒன்றை வைத்து நடராஜனை அடி அடி என அடித்தார். அன்றிலிருந்து நடராஜனுடன் யார் தொடர்பு வைத்தாலும் அவர்களை ஜெ. கட்டம் கட்டினார்.  நடராஜனுக்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை” என மதுசூதனன் தெரிவித்துள்ளார்.