திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (09:12 IST)

மதுசூதனன் உடல்நலக்குறைவு – அப்போல்லோவில் அனுமதி !

அதிமுக முன்னணித் தலைவர்களில் ஒருவரான மதுசூதனன் நெஞ்சுவலிக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பழம்பெரும் உறுப்பினர்களுள் ஒருவரும் தற்போதைய அதிமுகவின் அவைத்தலைவருமான மதுசூதனன் உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை 7 மணியளவில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை அண்ணா சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுசூதனன் பலமுறை அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் அவரது தொகுதியான ஆர் கே நகரில் போட்டியிட்டு டிடிவி தினகரனிடம் தோல்வியடைந்தார். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்காக தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.