தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் இருக்கிறது… அமைச்சர் மா சுப்ரமண்யன் விளக்கம்!
தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் இருப்பதாக அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு ஆரம்பித்தது முதலே எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் திமுக அரசு தற்போது பதவியேற்றுள்ள நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டுமென்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . அந்த வகையில் தற்போது நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உள்ளார். இந்த குழு நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்து ஆலோசித்து ஆய்வு செய்யும் என்றும் அதன் பின்னர் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மகக்ள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. அதனால் மாணவர்கள் அதற்காக பயிற்சி எடுக்க வேண்டும். 2006 ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல இப்போதும் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறியுள்ளார்.