1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (12:01 IST)

வளமான, வலிமையான தமிழகம்... ஸ்டாலினுக்கு ராகுல் அளித்த வாக்கு!

வளமான, வலிமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் என ராகுல் காந்தி டிவிட்டர் பதிவு. 

 
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்ற நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்திற்காக 25 அம்ச கோரிக்கைகளை பிரதமரிடம் சமர்பித்தார். இந்நிலையில் இன்று கூட்டணி கட்சியான காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி ராகுல்காந்தியை சந்தித்தார். 
 
அவர்களோடு அரசியல் உறவுகள் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் அன்பளிப்பாக சோனியா காந்திக்கு புத்தகம் ஒன்றை வழங்கினார். இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், வளமான, வலிமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.