திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (15:29 IST)

கதை விவாதத்தில் கலந்துகொள்ளும் சிவகார்த்திகேயன்… நெளியும் இயக்குனர் குழு!

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது 4 படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்புப் பணிகளில் உள்ளன. அதையடுத்து அவர் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இப்போது அவர் அடுத்து நடிக்க உள்ள சிங்கப்பாதை என்ற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த படத்துக்கான கதை விவாத்த்தில் இயக்குனர்கள் குழு ஈடுபட்டுள்ள நிலையில் கொரோனா காலத்தில் ஓய்வாக இருக்கும் சிவகார்த்திகேயன் தானும் கதை விவாதத்தில் கலந்துகொள்கிறாராம். இதனால் இயக்குனர் குழுவை சேர்ந்தவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அசௌகர்யமான சூழலுக்கு ஆளாகியுள்ளனராம்.