செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (13:46 IST)

தேடி வந்த மருத்துவத்தால் 34 லட்சம் பேர் பயன்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தேடி வந்த மருத்துவத்தால் 34 லட்சம் பேர் பயன்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் பலர் பயனடைந்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று மருத்துவம் மேற்கொள்ளும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாளடைவில் இந்த திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மக்களை தேடி மருத்துவம் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம்  திட்டம் மூலமாக இதுவரை 34.57 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அதற்கென தனி ஆய்வு மையம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.