வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (12:12 IST)

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை சட்டமன்றமாக மாற்றப்படுகிறதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

omandhurar
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை சட்டமன்றமாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என தலைமை செயலக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் அது குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.  
 
முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் ஓமந்தூரார் வளாகத்தில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு அந்த கட்டிடத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார். 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை கட்டிடத்தை சட்டமன்றமாக மாற்றப்பட வேண்டும் என்று தலைமைச் செயலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். 
 
இது குறித்து பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் ஓமந்தூரார் மருத்துவமனை மீண்டும் சட்டப்பேரவையாக மாற்றப்படாது என்று உறுதி அளித்தார்.
 
Edited by Mahendran