1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (09:48 IST)

73,206 பேர் பங்கேற்பு...கின்னஸில் இடம்பிடித்த சென்னை மாரத்தான் போட்டி

mk stalin
சென்னையில் உலக சாதனை முயற்சியாக கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டியை தமிழக அரசு நடத்தியுள்ளது.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில்,  விளையாட்டு, வீரர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி 42கிமீ, 10 கிமீ, 5கிமீ என  4 பிரிவுகளில்  நடைபெற்ற நிலையில்,  வெற்றி பெற்றவர்களுக்கு 9 பிரிவுகளில் மொத்தம் ரூ.10.70 லட்சம் பரிசாக வழங்கப்படவுள்ள நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது பரிசு வழங்கி வருகிறார்.

இந்த மாரத்தான்  போட்டியில்  73,206 பேர் கலந்து கொண்ட நிலையில், இப்போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 
அமைச்சர் உதயநிதி இப்போட்டியை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.