வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:59 IST)

கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் வெளியே வரக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மாணவர்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஒரே இடத்தில் மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்
 
ஒரு சில கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சரின் இந்த அறிவுறுத்தல் காரணமாக அவை ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.