1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 1 டிசம்பர் 2021 (07:43 IST)

இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பதும் தீபாவளிக்கு பிறகு பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளில் இயங்காமல் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மழை குறைந்து உள்ளதை அடுத்து இன்று கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இருப்பினும் மழை குறைந்தாலும் வெள்ளநீர் இன்னும் வடியாமல் இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சட்டமும் அறிவித்துள்ளார் 
 
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி இயங்காது என்றும் ஆனால் கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது