திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 2 ஆகஸ்ட் 2023 (12:18 IST)

மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களுக்கு நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

mk stalin
நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு தமிழர்கள் இருக்கும் நிலையில் அந்த இரண்டு தமிழர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிவாரண உதவி குறித்த உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியில்  ஏற்பட்ட கிரேன் விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகிய இரு தமிழர்களும் அடங்குவர். 
 
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் உறவினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது குடும்பத்தினருக்கு தல 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளார்.
 
Edited by Siva