1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (14:29 IST)

எழுவர் விடுதலை… திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை!

எழுவர் விடுதலை தொடர்பாக முதல்வருடன் திமுக எம்பிக்கள் வரத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின்.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான சட்டத் திருத்ததுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்டகாலமாக ஆளுநர் இழுத்தடித்து வந்த நிலையில் இப்போது தனக்கு அதிகாரம் இல்லை என சொல்லி குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் கூறியுள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2021 சட்டமன்ற தேர்தல் வருகிற நேரத்தில்தான் இந்த 7 பேரின் விடுதலை குறித்து முதல்வருக்கு நினைவு வந்திருக்கிறது. கடந்த ஜனவரி 25 ஆம் தேதியே தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்து தனக்கு அதிகாரமில்லை எனக் கூறிய பிறகு ஜனவரி 29 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து 7 பேரையும் விடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக முதல்வர் கூறியிருக்கிறார். இதைவிட நாகரீகமே இல்லாத அரசியல் நாடகம் இருக்க முடியுமா? விடுதலை தொடர்பான கோப்பே ஆளுநரிடம் இல்லாதபோது ஏன் முதலமைச்சர் அவரை சந்தித்தார்.

தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் வஞ்சக எண்ணமின்றி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 பேர் விடுதலையில் தேர்தலுக்கு தேர்தல் நாடகம் போடுவதை, வேடம் கட்டுவதை நிறுத்துங்கள். சிறையில் அடைந்த 8 ஆண்டுகளில் மரணதண்டனையை ரத்து செய்த திமுகவை பார்த்து நாடகம் போடுவதாக கூறுவதா? 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரை சந்திக்க முதல்வர் சென்றால் திமுக எம்.பிக்கள் உடன் வரத் தயார்எனத் தெரிவித்துள்ளார்.