புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (13:38 IST)

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை! – முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுனர் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஒப்புதல் குறித்து ஆளுனர் 7 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஆளுனர் அலுவலக அலுவலர் மத்திய அரசை சந்தித்து எழுவர் விடுதலை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடனான ஆலோசனையை தொடர்ந்து எழுவர் விடுதலை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.