தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர் – குடியரசு தலைவர் உரையை புறக்கணித்த 16 கட்சிகள்!
கொரோனா, விவ்சாயிகள் போராட்டம் உள்ளிட்ட கடுமையான சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டில் கொரோனா மற்றும் கொரோனா காரணமாக ஊரடங்கு காரணமாக இந்திய பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் முக்கிய சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் விவசாய போராட்டத்திற்கு இடையே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். ஆனால் வேளாண் சட்டங்களை திரும்ப பெறாதது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் குடியரசு தலைவர் உரையை புறக்கணித்துள்ளன.