1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. M.K.Stalin announce next TN tour

'நமக்கு நாமே' பயணத்தை அடுத்து 'எழுச்சி பயணம்: மு.க.ஸ்டாலினின் 180 நாள் திட்டம்

mk stalin
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் 'நமக்கு நாமே' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை அவர் அறிவித்துள்ளார்.



 
 
எழுச்சிப்பயணம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பயணம் வரும் நவம்பர் 7ஆம் தேதி முதல் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து 180 நாட்கள் தமிழகம் முழுவதும் இந்த பயணம் தொடரும் என்றும் திமுக தலைமைஅ அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சுற்றுப்பயணத்தின்போது ஆளும் கட்சியை தோலுரிக்கும் வகையிலும் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும் என்றும் திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
தாஜ்மஹாலுக்கு செல்கிறார் உபி முதல்வர்: பெரும் பரபரப்பு