வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (15:07 IST)

அ.தி.மு.க.வினர் ஆண்டு விழா நடத்துவதற்கு பதில் மூடு விழா நடத்தலாம்: சீமான்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பருக்குள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தேர்தலுக்கு தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் சார்பாக கலைக்கோட்டுதயம் போட்டியிடுவார் என்று அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,





ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்தமுறை எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயமே மீண்டும் போட்டியிட உள்ளார். எங்களது பலம் என்ன  என்பதை ஆர்.கே.நகரில் நிரூபிப்போம். அ.தி.மு.க.வினர் ஆண்டு விழா நடத்துவதற்கு பதில் மூடு விழா நடத்தலாம். டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் உயிர் பலி அதிகரித்துள்ளது. அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக உள்ளன என்று கூறினார்.