1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (13:06 IST)

இந்த தேர்தல் எதுக்கு? இடைத்தேர்தல் வரட்டும் : அழகிரி அதிரடி

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என அழகிரி தெரிவித்துள்ளார்.

 
திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளாததால் கோபத்தில் இருக்கும் அழகிரி செப்டம்பர் 5ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஒரு பேரணியை நடத்த இருக்கிறார். திமுகவின் பொதுக்கூழு கூட்டம் நாளை கூடுகிறது. இதில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாலர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களை எதிர்த்து இதுவரை யாரும் திமுகவில் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் நாளை போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து  மதுரையில் அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி “ அவர்கள் மனு தாக்கல் செய்தால் நான் என்ன செய்வது? என்னை முன்மொழிய சொல்கிறீர்களா?” என கோபமாக கேள்வி எழுப்பினார். மேலும், இந்த தேர்தலில் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், இடைத்தேர்தலின் போது நிச்சயம் நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வோம். அப்போது பார்த்துக்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார்.
 
எனவே, தனியாக கட்சி தொடங்கியோ அல்லது சுயேட்சையாகவோ அழகிரியின் ஆதரவாளர்கள் வரும் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.