வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (12:50 IST)

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம்: மீனா அதிர்ச்சி தகவல்!

90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா. இவர் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், அவர் தனது சினிமா பயணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், 'தன்னனுடைய காலத்திலும் பட வாய்ப்புக்கு படுக்கை அறை கலாச்சாரம் இருந்தது' என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும், 'எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பிரச்சனை உள்ளது. நான் எதிர் கொள்ளவில்லை என்றாலும், என் காலத்திலும் இது போன்ற பிரச்சனை இருந்தது. 
 
வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் திருந்த வேண்டும். அவர்கள் ஒரு பெண்ணிடம் 'டீல்' பேசுவதற்கு முன்பு, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்கின்றனர் என்பதை உணர வேண்டும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெற வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.