செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (07:56 IST)

கரையை கடக்க தொடங்கிய காற்றழுத்த தாழ்வு.. 11 மாவட்டங்களில் இன்று மழை!

storm
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு இன்று கரையை கடக்க தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியது என்பதும் இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தமிழகம் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்து தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க தொடங்கி விட்டதாகவும் அதனால் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி திருநெல்வேலி சிவகங்கை தஞ்சாவூர் கடலூர் உள்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva