1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (14:04 IST)

தமிழகத்தில் லாட்டரி விற்பனை படுஜோர்.! ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது..!!

Arrest
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
 
திண்டிவனத்தில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்  கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை  செய்தனர். அவர்கள் முன்னுககு பின் முரணாக பதில் அளித்தனர். 
 
Arrest2
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது அவர்கள்,
செங்கல்பட்டு  அடுத்த மதுராந்தகத்தைச் சேர்ந்த பாலாஜி, மனோ, செல்வம் என்பதும், இவர்கள் மூன்று பேரும் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 
 
Arrest3
இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ஐந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை படுஜோராக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Lottery sale, 3 people arrested, police action