செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 17 டிசம்பர் 2018 (13:42 IST)

முந்திக்கொண்ட எக்ஸ் ஏம்.எல்.ஏக்கள்: சசிகலாவுடன் அரசியல் விவாதம்; தினகரன் எங்கே?

முந்திக்கொண்ட எக்ஸ் ஏம்.எல்.ஏக்கள்: சசிகலாவுடன் அரசியல் விவாதம்; தினகரன் எங்கே?
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஏம்.எல்.ஏக்கள் சந்தித்து தங்களது அரசியல் நிலைபாடு குறித்து விவாதித்து வருகின்றனர். 
அமமுகவில் தினகரனின் நம்பிக்கைகுரிய நபராக இருந்த செந்தில் பாலாஜி சில அதிருப்திகள் காரணமாக திமுகவில் இணைந்தார். இதனால், அமமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. 
 
செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தினகரன் தெரிவித்திருந்தார். என்னதான் பிரச்சனை இல்லை என கூறினாலும் உள்ளுக்குள் வருத்தம் இருக்கதானே செய்யும். 
 
இந்த வருத்தம் அவருக்கு மட்டும் இல்லை மீதமுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களும்தான். அதாவது, மீதமுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அடுத்து தங்களது நிலைபாடு என்னவென்ற வருத்தத்தில் உள்ளனர். 
முந்திக்கொண்ட எக்ஸ் ஏம்.எல்.ஏக்கள்: சசிகலாவுடன் அரசியல் விவாதம்; தினகரன் எங்கே?
இதனால், ஏற்கனவே வெளியான தகவலின்படி இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து உள்ளனர். இந்த சந்திப்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவென்பதை விவாதிக்க கூடும் என தெரிகிறது. 
 
இந்நிலையில், டிடிவி தினகரனும் அவர்களுடன் சென்றுள்ளாரா என்பது குறித்த உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், தினகரனும் இந்த சந்திப்பில் உள்ளார் என அரசல் புறசலாக செய்திகள் வெளியாகின்றன.