தனியாக இருந்த 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!

Sasikala| Last Updated: செவ்வாய், 14 மார்ச் 2017 (17:56 IST)
மீஞ்சூரில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தின் கீழ் கூலி தொழிலாளி ராஜேஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ராஜேஷை தேடி வருகின்றனர்.

 
சென்னை புறநகர் பகுதியான மீஞ்சூர் அருகே உள்ள அலுர் என்ற ஊரில் 9ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி  தனது படிப்பை தொடர முடியாமல் இருந்துள்ளார். அவர்களது பெற்றோருக்கு உதவியாக வீட்டியிலேயே இருந்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று இந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்ததை பயன்படுத்தி ராஜேஷ் என்ற   கூலி தொழிலாளி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதையடுத்து அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் ராஜேஷ் அந்த இடத்தில்  இருந்து தப்பி ஓடியுள்ளார். வேலைக்குச் சென்று இருந்த அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு அக்கம் பக்கத்தினர் கொடுத்த  தகவலையடுத்து விரைந்து வந்த பெற்றோர், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் காவல் துறையினர்  ராஜேஷை தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :