திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (21:56 IST)

தமிழகத்தில் முழு ஊரடங்கா?, புதிய கட்டுப்பாடுகளா? இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு என தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று 26 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் கொரோனா வைரஸில் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அல்லது முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளிவந்தது
 
மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் மீண்டும் ஒரு லாக்டவுனை தாங்கும் சக்தி மக்களுக்கு இல்லை என்றும், கொரோனாவை விட கொடியது பசி என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர்.