செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (08:28 IST)

9 மாவட்டங்களில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! – வெல்லப் போவது யார்?

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இந்நிலையில் இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

ஆரம்பமாக தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பகுதிகளில் மதுபானக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் 74 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.