செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:40 IST)

வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கடலூரில் வரும் திங்கட்கிழமை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 20ஆம் தேதி அதாவது வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் அறிவித்துள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் திங்கட்கிழமை விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக கருதப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது