திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (16:07 IST)

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!? – கட்சிகள் மும்முரம்!

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதி நாளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதே சமயம் அரசியல் கட்சிகளும் விருப்ப மனுக்கள் பெறுதல், வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தல், கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குதல் ஆகிய பணிகளில் மும்முரமாய் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை முடித்து விட்டதால் நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒருவேளை நாளை அறிவிக்கப்படாவிட்டாலும் டிசம்பர் 7க்குள் உறுதியாக அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.