1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (18:46 IST)

வாக்குப்பெட்டியை அலேக்காய் திருடிய திருடர்கள்!

புதுக்கோட்டை அருகே பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மக்கள் பலர் ஆர்வமாக வந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பல இடங்களில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வரும் நிலையில் சில இடங்களில் சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது. 
 
இந்நிலையில், புதுக்கோட்டை பெரிய முள்ளிபட்டியில் வாக்குசாவடியின் பின்பக்க கதவை உடைத்து வாக்குபெட்டி திருடப்பட்டது. ஆம், பாதுகாப்பிற்கு இருந்த காவலர்களை தள்ளிவிட்டு மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற் அசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இருப்பினும் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு திருடப்பட்ட வாக்குப்பெட்டியை மீட்டனர். மேலும், வாக்குபெட்டியை திருடிச்சென்ற இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.