செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (13:57 IST)

பாலத்தால் பாழானது வாழ்வாதாரம்! கடலில் இறங்கி எதிர்க்கும் ஆலந்தலை மீனவர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரி இறங்குதளத்தை கண்டித்தும், தூண்டில் பாலம் அமைத்து தர வலியுத்தி ஆலந்தலை மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகில் கருப்பு கொடி கட்டி 200க்கும் மேற்பட்டோர் கடலில் இறங்கி திடீர் போராட்டம் நடத்தினர்.


 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது கல்லாமொழி. இங்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடன்குடி அனல் நிலைய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 320 மெகாவாட் திறன் கொண்ட 10,000 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
 
இந்த அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டு வருவதற்காக கல்லாமொழி அருகே கடலில் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு  பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 
 
தற்போது ஒரு கிலோ மீட்டர் வரை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அமைப்பதால் ஆலந்தலை பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று ஆலந்தலை சேர்ந்த சுமார் 200 நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்ட 200 க்கும் மேற்பட்ட படகில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.