வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 19 ஜனவரி 2019 (10:56 IST)

அண்ணன் சொல்லட்டும்... ஸ்டாலின் சொல்லுக்காக கனிமொழி வெய்ட்டிங்: அப்படி என்னவா இருக்கும்?

மக்களவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்று வருகிறார். 
 
இதற்கு முன்னர் கனிமொழி குலசேகரப்பட்டிணம் ஏவுதளம் மற்றும் ஸ்டெர்லைட் போன்ற விவகாரங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த போது அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது. 
 
இப்போது ஊராட்சி சபை கூட்டத்திற்கு கனிமொழிக்கு தூத்துக்குடி பகுதியை ஒதுக்கியுள்ளது முன்னர் வந்த செய்தியை உண்மையாக்கும் விதமாக உள்ளது. இது குறித்து கனிமொழியிடம் வினவிய போது அவர் பினவருமாறு பதில் அளித்தார், 
ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். எனக்கு தூத்துக்குடி பகுதியை தலைவர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். அதன்படி இங்கு வந்துள்ளேன்.
 
நான் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கு இதனை ஒரு அச்சாரமாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வியை தலைவர் ஸ்டாலினைதான் கேட்க வேண்டும். என்னுடைய கட்சியின் தலைவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார்.