திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (11:07 IST)

உங்க தொகுதிக்கு இப்ப எம்.எல்.ஏ இருக்காரா? –காலி தொகுதிகள் விவரம்

சென்னை உயர்நீதிமன்றம் நேற்று 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என அறிவித்த தீர்ப்பால் தற்போது 20 சட்டமன்ற தொகுதிகள் உறுப்பினர்கள் இல்லாமல் காலியாக உள்ளன.

எம்.எல்.ஏக்களின் மரணம் அல்லது எம்.எல்.ஏக்கள் மீதான குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று பதவி விலகுதல் போன்ற காரணங்களால் அவ்வப்போது ஒன்றிரண்டு தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலை ஏற்படும். ஆனால் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. இது போன்ற ஒரு சூழ்நிலை வெகு அபூர்வமாகவே நடக்கும்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அதில் பதவி வகித்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விவரம் பின்வருமாறு
1.ஆண்டிப்பட்டி- தங்க தமிழ்ச்சல்வன்
2.பெரம்பூர்- பி.வெற்றிவேல்
3.அரவக்குறிச்சி- வி.செந்தில்பாலாஜி
4.பாப்பிரெட்டிப்பட்டி- பி பழனியப்பன்
5.பெரியகுளம்- கே கதிர்காமு
6.பூந்தமல்லி- டி ஏ ஏழுமலை
7.அரூர்- ஆர் ஆர் முருகன்
8.பரமக்குடி- எஸ் முத்தையா
9.மானாமதுரை- சோ மாரியப்பன் கென்னடி
10.சோளிங்கர்- என் ஜி பார்த்திபன்
11.திருப்போரூர்- மு கோதண்டபானி
12.ஒட்டப்பிடாரம்- ஆர் முத்துராஜ்
13.தஞ்சாவூர்- எம் ரெங்கசாமி
14.நிலக்கோட்டை- ஆர் தஙதுரை
15.ஆம்பூர்- ஆர் பாலசுப்ரமணி
16.சாத்தூர்- எஸ் ஜி சுப்பிரமணியன்
17.குடியாத்தம்- சி ஜெயந்தி பத்மநாபன்
18.விளாத்திக்குளம்- கே உமாமகேஸ்வரி
19.திருப்பரங்குன்றம்- கே போஸ்(மரணம்)
20.திருவாரூர்- மு கருணாநிதி(மரணம்)

இதில் முதல் 18 பேரும் சபாநாயகரின் தகுதிநீக்கத்தின் மூலம் பதவியிழந்துள்ளதால் அந்த தொகுதிகள் காலியாகி உள்ளன. கே போஸ் மற்றும் மு கருணாநிதி ஆகியோரின் மறைவார்ல் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய தொகிதிகள் காலியாக உள்ளன.