திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 மே 2021 (19:27 IST)

மு.க.ஸ்டாலின் திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு

திமுக தலைவர் ஸ்டாலின் திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது

இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதியில் போட்யிட்டு 3 ஆம் முறை  வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் நாளை மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களைச் சந்தித்து ஆட்சிமை அமைக்க உரிமைகோருகிறார் ஸ்டாலின்.

இந்நிலையில், இன்று உதய சூரிய சின்னத்தின் போட்டியிட்டு வென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இதற்காக அவரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் முன்னணித்தலைவர்கள் அவரை வாழ்த்திவருகின்றனர்.