1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:53 IST)

எல்.ஐ.சி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

lic
யுலிப் பாலிசிகள் தவிர மற்ற அனைத்துக் காலாவதியான பாலிசிகளை அக்டோபர் 21 ஆம் தேதி வரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சியில் பாலிசி திட்டத்தைத் தொடங்கி அதைத் தொடராமல் பாதியில் விட்டிருந்தால், எல்.ஐ.சி அறிவித்துள்ள இத்திட்டத்தைப் பயன்படுத்தி அத்திட்டத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், 1 லட்சம் ரூபாய் வரை பிரீமியம் செலுத்தியிருந்தால், அதன் தாமத கட்டணத்தில் ரூ.25 %, அதிகபட்சமாக ரூ.2500 ; ரூ.3 லட்சம் வரை  பிரீமியம் செலுத்தியிருந்தால், 25% அதிபட்சமாக ரூ.3000 சலுகை பெறலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், ரூ.3 லட்சத்திற்கு மேல் பிரீமியம் தொகை செலுத்தியிருந்தால், 30% அதிகபட்சமாக ரூ.3500 தள்ளுபடியில் சலுகை பெறலாம் என தெரிவித்துள்ளார்.

எல்.ஐ.சி நடந்தும் இந்த முகாமில் முதல் பிரீமியத்தின் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் உள்ள பாலிசிகளை இந்த பாலிசிகளை இந்த சிறப்புத் திட்டத்தில் புதுப்பிக்கலாம்  என தெரிவித்துள்ளார்.