வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (17:39 IST)

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்...' கூட்டணிக்கு தயார் - ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது.  அதில் கூட்டணி வைக்க பல கட்சிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
 
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம். நான் சொன்ன மாதிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரசா வேலைகள் நடைபெற்று வருகிறது. தேர்த்ல் குழு , பிரச்சார குழு,தொகுதி பங்கீட்டு குழு , தேர்தல் அறிக்கை குழு ஆகியவற்றை தயார் செய்துள்ளோம்.

ஆனால் திமுக இரட்டை சவாரி செய்து வருகிறது. எங்களுக்காவது தனியாக தேர்தலில் நின்று ஜெயித்த வரலாறு உண்டு. ஆனால் திமுகவுக்கு அப்படி எதுவும் இல்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.