புதன், 9 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (15:18 IST)

பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை நசுக்க ஒன்றுபடுவோம்..! முதல்வர் ஸ்டாலின்..!!

stalin
பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை நசுக்கவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை அவர்களின் பிடியில் இருந்து மீட்கவும் ஒன்றுபடுவோம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
 
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், 2014 முதல், மத்திய பாஜக அரசின் ஆட்சியானது இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை கிழித்தெறிந்து, சகிப்பின்மையை வளர்த்து, நமது முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டை அங்கீகரிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்,
 
சிஏஏ போன்ற அரசியலமைப்பிற்கு முரணான செயல்களை அவர்கள் செயல்படுத்துவது இஸ்லாமிய வெறுப்பை சட்டப்பூர்வமாக்க மட்டுமே உதவுகிறது என்று முதல்வர் கூறியுள்ளார். பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை நசுக்கவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை அவர்களின் பிடியில் இருந்து மீட்கவும் ஒன்றுபடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.